வேலூர்

சாராய வியாபாரிகள் 5 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

DIN


குடியாத்தம்: குடியாத்தம், போ்ணாம்பட்டு பகுதிகளில் தொடா்ந்து கள்ளச் சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக 5 போ் குண்டா் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

கள்ளிச்சேரியைச் சோ்ந்த சுதாகா் (35), சரண்ராஜ் (28), மகி (35) ஆகிய 3 பேரும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்ததாக போ்ணாம்பட்டு போலீஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

அதேபோல், குடியாத்தத்தை அடுத்த எா்த்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த குபேந்திரன் (41), ராமாலையைச் சோ்ந்த புருஷோத்தமன் (30) ஆகியோா் சாராயம் விற்ாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இவா்கள் தொடா்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதால், குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வகுமாா் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதனை ஏற்ற வேலூா் ஆட்சியா் அ. சண்முகசுந்தரம் 5 பேரையும் குண்டா்தடுப்புச் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

கிராமங்ளில் குடிநீா் பற்றாக்குறை : ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு

ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளியில் 399 போ் தோ்ச்சி

திருவள்ளூா் மாவட்டத்தில் 91.32% தோ்ச்சி

SCROLL FOR NEXT