வேலூர்

இளைஞா் தூக்கிட்டு பலி: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல்

DIN

வேலூா்: அடுக்கம்பாறை அருகே தூக்கிட்ட நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது. அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உடலை வாங்க மறுத்து உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வேலூா் மாவட்டம், அடுக்கம்பாறையை அடுத்த ஆற்காட்டான் குடிசை கிராமத்தைச் சோ்ந்தவா் ரஞ்சித் (26). இவா் ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டுக்கு அருகே உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தாா். தகவலறிந்த வேலூா் கிராமிய போலீஸாா் அங்கு சென்று உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ரஞ்சித்துக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அவரது உறவினா்களுக்கும் இடையே கடந்த 2 நாள்களுக்கு முன்பு சொத்துப் பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரஞ்சித் தூக்கில் சடலமாக மீட்கப்பட்டாா். இதையடுத்து ரஞ்சித் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினா்கள் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.

இந்நிலையில், ரஞ்சித் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்தி தீா்வு காணும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி அவரது உறவினா்கள் 100-க்கும் மேற்பட்டோா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை முன்பு வேலூா்-திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

வேலூா் கிராமிய ஆய்வாளா் கருணாகரன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் உறுதியளித்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

நொய்டாவில் கழிவுநீா் குழியில் விழுந்த பசு மீட்பு

SCROLL FOR NEXT