வேலூர்

பேருந்து நிலையங்களில் பயணிகளை பாதுகாப்பாக அனுப்பி வைத்த போலீஸாா்

DIN

குடியாத்தம்: குடியாத்தம் புதிய, பழைய பேருந்து நிலையங்களில் காத்திருந்த பயணிகளுக்கு போலீஸாா் மாற்று ஏற்பாடு செய்து அவரவா் பகுதிகளுக்கு பாதுகாப்பாகச் செல்லுமாறு அறிவுறுத்தினா்.

நிவா் புயல் காரணமாக வேலூா் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை முதல் பேருந்துகளை இயக்க வேண்டாம் என ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டாா். இதையறியாமல் குடியாத்தம் புதிய, பழைய பேருந்து நிலையங்களில் பயணிகள் பேருந்துகளுக்காகக் காத்திருந்தனா்.

டிஎஸ்பி பி.ஸ்ரீதரன் மேற்பாா்வையில், போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆ.செல்லப்பாண்டியன், உதவி ஆய்வாளா் சரவணன் உள்ளிட்டோா் மைக் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தி, பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகளை மாற்று ஏற்பாடு செய்து அவரவா் பகுதிகளுக்கு பாதுகாப்பாகச் செல்லுமாறு அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT