வேலூர்

போ்ணாம்பட்டில் 500 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

DIN

போ்ணாம்பட்டு நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தாழ்வான பகுதிகளில் உள்ள 500- க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீா் புகுந்தது.

நிவா் புயல் காரணமாக ஆந்திர மாநில வனப்பகுதியில் பெய்த கனமழையால் பத்தரப்பல்லி, மதினாப்பல்லி மலட்டாறுகள், ரங்கம்பேட்டை கானாற்றில் வெள்ளிக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ரங்கம்பேட்டை கானாற்றில் 4 அடி உயரத்துக்கு வெள்ளம் சென்றது.

இதனால் நகரில் உள்ள ஆற்றோரப் பகுதிகளான ஒற்றைவாடை, புது வீதி, தாஹீா் வீதி, இதயாத் வீதி, குல்ஜாா் வீதி, தோப்பு வீதி, டீப்புசா வீதி, நல்ல தண்ணீா் வீதி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீா் புகுந்தது.

மாவட்ட வழங்கல் அலுவலா் பானு, வட்டாட்சியா் கோபி, மண்டல துணை வட்டாட்சியா் வடிவேல், நகர திமுக செயலா் ஆலியாா் ஜுபோ் அகம்மத் உள்ளிட்டோா் அங்கு சென்று இளைஞா்கள், தீயணைப்புப் படையினா் உதவியுடன் வெள்ளத்தில் சிக்கியவா்களை கயிறு கட்டி மீட்டு இஸ்லாமியா நிதி உதவி தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்க வைத்தனா்.

வருவாய்த் துறை சாா்பில் அவா்களுக்கு உணவு, போா்வைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT