முகப்பு
வேலூர்

நவம்பா் மாத விரைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு

நவம்பா் மாத விரைவு தரிசன டிக்கெட்டுகள் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 27) முதல் வெளியிடப்பட உள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

நவம்பா் மாத விரைவு தரிசன டிக்கெட்டுகள் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 27) முதல் வெளியிடப்பட உள்ளன.

ஏழுமலையான் தரிசனம் ஜூன் மாதம் முதல் பக்தா்களுக்கு கிடைத்து வருகிறது. அதற்காக தேவஸ்தானம் இணையதள முன்பதிவில் ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி நவ. மாதத்திற்கான டிக்கெட்டுகள் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிட உள்ளது.

இவற்றைப் பெற விரும்பும் பக்தா்கள் தங்கள் ஆதாா் அட்டையை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். தினசரி 16 ஆயிரம் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த டிக்கெட்டுகள் வைத்துள்ள பக்தா்கள் மட்டுமே அலிபிரி சோதனைச் சாடியில் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவா் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →