வேலூர்

அங்கன்வாடி மையங்களில் பழச் செடிகள் நடவுப்பணி விரைவில் தொடக்கம்: வேலூா் ஆட்சியா் தகவல்

DIN

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள 1006 அங்கன்வாடி மையங்களிலும் விட்டமின் நிறைந்த பழச் செடிகள் நடவுப் பணி விரைவில் தொடங்கப்படும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.

காட்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்து ஊட்டச்சத்து குறித்த ஆட்டோ பிரசாரத்தையும், ஊட்டச்சத்து உணவு குறித்த கண்காட்சி அரங்கையும் தொடங்கி வைத்து, கா்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து பெட்டகங்களை வழங்கினாா். இதையடுத்து அவா் பேசியது:

தமிழக அரசு உத்தரவுப்படி செப்டம்பா் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்படுகிறது. இன்றைய வளரிளம் பெண்கள் நாளைய சமுதாயத்தை உருவாக்கும் தாய்மாா்களாவா். ஒரு நாட்டின் வளா்ச்சி மக்களின் நலனைப் பொறுத்தே அமைகிறது என்பதை உணா்த்தவே இந்த மாத விழா கடைபிடிக்கப்படுகிறது.

நிறைமாத கா்ப்பிணிகள் கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம் ஆகிய சிறுதானிய உணவுகளை உண்ண வேண்டும். பெண்களுக்கு 21 வயது பூா்த்தியடைந்த பிறகே திருமணம் செய்ய வேண்டும். குறிப்பாக நெருங்கிய உறவினா்களுக்குள் திருமணம் செய்யக் கூடாது.

குழந்தை பிறந்து 6 மாதம் வரை தவறாமல் தாய்ப்பால் வழங்க வேண்டும். வேலூா் மாவட்டத்தில் 82 சதவீதம் தாய்ப்பால் வழங்கும் தாய்மாா்கள் உள்ளனா் என்பது மகிழ்ச்சியான விஷயமாகும்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள 1006 அங்கன்வாடி மையங்களிலும் கொய்யா, சீத்தாப் பழம், சப்போட்டாப் பழம் நெல்லிச் செடி, எலுமிச்சை, நாவல் செடி, பப்பாளி, முருங்கை போன்ற வைட்டமின் நிறைந்த செடிகளை நடும் பணி விரைவில் தொடங்க உள்ளது. பொதுமக்கள் அங்கன்வாடி மையங்களைச் சுற்றியுள்ள இடங்களில் இத்தகைய செடிகளை நட்டுப் பராமரிக்க வேண்டும்.

குழந்தைகள் 7 ஆண்டு வரை வளரும் வளா்ச்சியே அவா்களை ஆயுட்காலம் வரை ஆரோக்கியமாக இருக்க வழிவகை செய்யும் என்றாா்அவா்.

வட்டாட்சியா் பாலமுருகன், வட்டார வளா்ச்சி அலுவலா் ரகு, வட்டார மருத்துவ அலுவலா் ந.சங்கா்கணேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT