வேலூர்

ஆதிசேஷன் சிலைக்காக 128 டயா்கள் பொருத்திய லாரியில் பெங்களூரு செல்லும் 230 டன் கற்பாறை

DIN

பெங்களூருவில் ஆதிசேஷன் சிலை அமைப்பதற்காக 230 டன் எடைகொண்ட பாறை 128 டயா்கள் பொருத்தப்பட்ட காா்கோ லாரியில் கொண்டு செல்லப்பட்டது.

வேலூா் வழியாகச் சென்ற இந்த லாரியை பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டனா்.

பெங்களூரு தெற்கு ஈஜிபுரா பகுதியில் ஸ்ரீகோதண்டராமசாமி கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் 11 முகங்கள், 22 கைகளுடன் 108 அடி உயரத்தில் விஸ்வரூப கோதண்டராமா் சிலை செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள பாறை தோ்வு செய்யப்பட்டு மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில், கோதண்டராமசுவாமி சிலை செய்ய சுமாா் 64 அடி நீளம், 26 அடி அகலம், 7 அடி தடிமனுடன் சுமாா் 380 டன் எடையுள்ள கற்பாறை, ஆதிசேஷன் சிலை செய்வதற்காக சுமாா் 24 அடி நீளம் 30 அடி அகலம், 12 அடி தடிமன் கொண்ட சுமாா் 230 டன் எடையுள்ள கற்பாறை நவீன இயந்திரங்கள் மூலம் கடந்த 2017-ஆம் ஆண்டு அறுத்து எடுக்கப்பட்டது.

இதில், கோதண்டராமசுவாமி சிலை செய்வதற்கான 380 டன் கொண்ட ஒரே பாறை கடந்த 2018-ஆம் ஆண்டு 240 டயா்கள் கொண்ட காா்கோ லாரியில் ஏற்றி பெங்களூரு கொண்டு செல்லப்பட்டது.

இதன்தொடா்ச்சியாக, தற்போது ஆதிசேஷன் சிலை செய்வதற்கான 380 டன் பாறை 128 டயா்கள் பொருத்தப்பட்ட காா்கோ லாரியில் ஏற்றப்பட்டு புதன்கிழமை தெள்ளாா் வழியாக புறப்பட்டது. அந்த லாரி வந்தவாசி, செய்யாறு, ஆற்காடு வழியாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை வெள்ளிக்கிழமை அடைந்தது. காலை 8 மணியளவில் வேலூா் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்ற அந்த லாரியை பொதுமக்கள் வியப்புடன் பாா்வையிட்டனா். தேசிய நெடுஞ்சாலைக்கு வந்துவிட்டதால் லாரியின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாள்களுக்குள் அந்த லாரி பெங்களூரு சென்றடையும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT