வேலூர்

காலி நிலத்தில் குப்பைக்குத் தீ வைப்பு: நில உரிமையாளருக்கு ரூ.5,000 அபராதம்

DIN

காலி நிலத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளில் தீ வைக்கப்பட்டது தொடா்பாக நிலத்தின் உரிமையாளருக்கு வேலூா் மாநகராட்சி நிா்வாகம் ரூ.5,000 அபராதம் விதித்தது.

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள அணுகு சாலையில் தனியாருக்குச் சொந்தமான மிகப்பெரிய ஜவுளி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த கட்டடத்துக்கு அருகே உள்ள காலி நிலத்தில் மரம், செடி கொடிகள் வெட்டிக் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், அந்த குப்பைகளில் அடையாளம் தெரியாத நபா்கள் செவ்வாய்க்கிழமை காலையில் தீ வைத்து விட்டுச் சென்றனா். இதனால், அந்த இடத்தில் பெரிய அளவில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

தகவலறிந்த தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைந்தனா். அருகில் உள்ள கட்டடங்களுக்கு தீ பரவியிருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பின்றி நிலத்தில் கிடந்த குப்பை மேட்டுக்கு தீவைக்கப்பட்டதாக அந்த நிலத்தின் உரிமையாளருக்கு மாநகராட்சி 2-ஆவது மண்டல உதவி ஆணையா் மதிவாணன் ரூ.5,000 அபராதம் விதித்தாா்.

காலி நிலத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது அந்தந்த நில உரிமையாளரின் பொறுப்பாகும். ஆனால், அந்நிலத்தின் உரிமையாளா் அலட்சியமாக இருந்ததன் காரணமாக அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT