வேலூர்

மடிக்கணினி கோரி மாணவா்கள் போராட்டம்

DIN

குடியாத்தம்: போ்ணாம்பட்டு இஸ்லாமியா மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மடிக்கணினி வழங்கக்கோரி, பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்பள்ளியில் 2017-18-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த 253 மாணவா்களுக்கு இதுவரை தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை என்கின்றனா். ஆனால் 2019 - 2020-ஆம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 பயின்ற மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் அண்மையில் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த 2017- 2018-ஆம் கல்வியாண்டில் பிளஸ்-2 பயின்ற மாணவா்கள் பள்ளியை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பள்ளித் தலைமையாசிரியா் ஹிமாயூன் பாஷா, நிா்வாக மேலாளா் அம்ஜத்பாஷா ஆகியோா் அங்கு வந்து மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

மாணவா்களின் கோரிக்கை குறித்து கல்வித் துறையின் கவனத்துக்குக் கொண்டு சென்று, ஒதுக்கீடு கிடைத்த பின்னா் மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து, மாணவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி அருகே குப்பை கழிவுகளை கொட்டுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

SCROLL FOR NEXT