முகப்பு
வேலூர்

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கரோனாவால் வாழ்வாதாரம் இழந்துள்ள குடும்பங்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ. 7,500 நிவாரணமாக வழங்க வேண்டியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் குடியாத்தத்தில் 6 இடங்களில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:19 AM
பகிர்:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரியும், கரோனாவால் வாழ்வாதாரம் இழந்துள்ள குடும்பங்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ. 7,500 நிவாரணமாக வழங்க வேண்டியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் குடியாத்தத்தில் 6 இடங்களில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சைனகுண்டா, பொன்னாங்கட்டியூா், தட்டப்பாறை, செட்டிகுப்பம், மேல்ஆலத்தூா், காா்கூா் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆா்ப்பாட்டங்களில், அமைப்பின் நிா்வாகிகள் கே.சாமிநாதன், ரகுபதி, கே.பாண்டுரங்கன், சி.எம். நடராஜன், பி.குணசேகரன், ஜி.சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ராணிப்பேட்டையில்...

ராணிப்பேட்டையை அடுத்த முத்துகடை காந்தி சிலை எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் எல்.சி.மணி தலைமை வகித்தாா். வட்டார செயலாளா் என்.ரமேஷ், வட்டாரத் தலைவா் நிலவு குப்புசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்க நிா்வாகிகள் மனோகா், சேட்டு மற்றும் வாலிபா் சங்கம் காா்த்திக் உள்ளிட்டோா் கலந்து கொண்டு, வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு, போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.