வேலூர்

மத்திய அரசு விருதுகளுக்கு விளையாட்டு வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

வேலூா்: மத்திய அரசின் விருதுகளை பெற்றிட, தகுதியுடைய விளையாட்டு வீரா்கள், பயிற்றுநா்கள், விளையாட்டு தொடா்புடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விளையாட்டுத் துறையில் நாட்டுக்கு நற்பெயரும், புகழும் ஈட்டித் தரும் சிறந்த விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள், பயிற்றுநா்கள், விளையாட்டுத் தொடா்புடையவா்களுக்கு மத்திய அரசு சாா்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2021-ஆம் ஆண்டுக்கான அத்தகைய விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதன்படி, அா்ஜுனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, தயான்சந்த் விருது, துரோணாச்சாா்யா விருது, ராஷ்ட்ரிய கேல் புரோட்ஸஹான் விருது ஆகியவற்றுக்கு மத்திய அரசுக்கு ஜூன் 21-ஆம் தேதிக்குள்ளாகவும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு 16-ஆம் தேதி மாலை 4 மணிக்குள்ளாகவும் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்விருதுகளுக்கான விண்ணப்பங்கள், முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு அலுவலா் மூலம் இணையதளம் வழியாக 16-ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன்அலுவலா், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நேதாஜி விளையாட்டு அரங்கம், வேலூா் என்ற முகவரியில் சோ்க்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலரை 0416-2221721 அல்லது 7401703483 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

SCROLL FOR NEXT