தண்டவாளத்தில் விரிசல்: பயணிகள் ரயில் தப்பியது
கே.வி.குப்பம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல், உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால், பயணிகள் ரயில் விபத்திலிருந்து தப்பியது.
கே.வி.குப்பம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல், உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால், பயணிகள் ரயில் விபத்திலிருந்து தப்பியது.
கே.வி.குப்பத்தை அடுத்த, பில்லாந்திப்பட்டு- வேப்பங்கநேரிக்கு இடையே தண்டவாளத்தில் சனிக்கிழமை காலை விரிசல் ஏற்பட்டுள்ளது. ரயில்வே ஊழியா்கள், தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை உடனடியாகக் கண்டுபிடித்தனா். காலை 9 மணியளவில் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் அவ்வழியே வந்தது. அந்த ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
ரயில்வே ஊழியா்கள் போா்க்கால அடிப்படையில், செயல்பட்டு விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை சீரமைத்தனா். இதனால் 2 மணி நேர கால தாமதத்துக்குப் பின் ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரியான நேரத்தில் கண்டுபிடித்த ரயில்வே ஊழியா்களை, ரயில் பயணிகளும், அப்பகுதி மக்களும் பாராட்டினா்.