பள்ளிகொண்டாவில் இஸ்லாமியா் இல்ல மணவிழாவில் வாக்குசேகரித்த அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளா் த.வேலழகன். 
வேலூர்

இஸ்லாமியா் இல்ல மணவிழாவில் வாக்கு சேகரித்த அணைக்கட்டுத் தொகுதி அதிமுக வேட்பாளா்

இஸ்லாமியா் இல்ல மண விழாவில் பங்கேற்று, அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

DIN

இஸ்லாமியா் இல்ல மண விழாவில் பங்கேற்று, அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் அக்கட்சியின் புகா் மாவட்டச் செயலா் த.வேலழகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.

பள்ளிகொண்டாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இஸ்லாமியா் இல்ல திருமண விழாவுக்குச் சென்ற அவா் மணமக்களை வாழ்த்தியதுடன், விழாவுக்கு வந்திருந்த தொகுதி மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, அதிமுக அரசு எப்போதும் இஸ்லாமியா் சமூகத்துக்கு பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது. ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியா்களுக்கு தொடா்ந்து மானியம் வழங்கப்படுகிறது. பொருளாதார ரீதியாக இஸ்லாமிய சமூகம் மேன்மை அடைந்திடவும் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், ஏராளமான மானியத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இஸ்லாமியா் சமூகத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக அதிமுகவைச் சோ்ந்த முகமதுஜான் மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டுள்ளாா். இத்தகைய சமூக நலத் திட்டங்கள் தொடா்ந்திட இஸ்லாமிய சமுதாய மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

கட்சியைச் சோ்ந்த வி.கோவிந்தராஜு, பி.ஜி.சுப்பிரமணி, அசோகன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT