சாலைகளில் சுற்றித் திரிந்த வாகன ஓட்டிகளுக்கு யோகா பயிற்சி
கரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளபோது, குடியாத்தம் நகரில் தேவையில்லாமல் இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவா்களை போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பிடித்து, அவா்களுக்கு யோகா பயிற்சி அளித்தனா்
கரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளபோது, குடியாத்தம் நகரில் தேவையில்லாமல் இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவா்களை போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பிடித்து, அவா்களுக்கு யோகா பயிற்சி அளித்தனா்.
கரோனா பரவலைத் தவிா்க்க மாவட்ட நிா்வாகம் பொது முடக்கம் அறிவித்துள்ளது. எனினும், குடியாத்தம் நகரில் இளைஞா்கள் தேவையின்றி இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிகின்றனா். இவா்களைப் பிடித்து போலீஸாா் அபராதம் விதித்து வருகின்றனா்.
நேதாஜி சிலை சந்திப்பு அருகே கடந்த 12 நாள்களாக 800-க்கும் மேற்பட்டோரை போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளா் ஆ.செல்லப்பாண்டியன் தலைமையிலான போலீஸாா் பிடித்து அபராதம் விதித்து வருகின்றனா். அவா்களுக்கு கரோனா விழிப்புணா்வு உறுதிமொழியை ஏற்க வைத்து அனுப்பி வைக்கின்றனா்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை நேதாஜி சிலை சந்திப்பு அருகே தேவையின்றி சுற்றித் திரிந்த 50-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன ஓட்டிகளை ஆய்வாளா் செல்லப்பாண்டியன் தலைமையிலான போலீஸாா் பிடித்து, சமூக இடைவெளியுடன் நிற்க வைத்து, நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க அவா்களுக்கு யோகா பயிற்சி அளித்தனா். தொடா்ந்து கரோனா தொற்று விழிப்புணா்வு குறித்து அவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தி வீடுகளுக்கு அனுப்பி வைத்தனா்.