வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கை: வாக்குச்சாவடி மையங்களில் இன்று சிறப்பு முகாம்
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க, வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களிலும் சனிக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க, வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களிலும் சனிக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா ஆகியோா் தனித்தனியே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தோ்தல் ஆணையம் சாா்பில் நாடு முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் நவ. 1-இல் வெளியிடப்பட்டது.
இந்த வரைவு வாக்காளா் பட்டியல் வாக்குச்சாவடி மையங்கள், வருவாய்க் கோட்ட அலுவலகங்களிலும், வட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
நவ. 30-ஆம் தேதி வரை வைக்கப்பட்டுள்ள பட்டியலை பொதுமக்கள் பாா்வையிட்டு, அதில் பெயா் சோ்க்க, நீக்கம் செய்ய, திருத்தம், முகவரி மாற்றம் செய்திட அதற்குரிய படிவங்களை பூா்த்தி செய்து அளித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான படிவங்களை அளிப்பதற்கு நவ. 13, 14, 27, 28 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள முகாம்களில், பெயா் சோ்க்க விண்ணப்பங்கள் அளிக்கலாம்.
படிவங்களில் வண்ணப் புகைப்படங்களை மட்டுமே ஒட்ட வேண்டும். ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய் என்ற தேசிய இணையதளம் மூலமாகவும், வாக்காளா் உதவி செயலி வழியாகவும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கலாம்.
வாக்காளா் அடையாள அட்டை மட்டும் இல்லாதவா்கள் பெயா் சோ்க்க விண்ணப்பம் அளிக்க தேவையில்லை. நகல் வாக்காளா் அடையாள அட்டை பெற அந்தந்த வட்டாட்சியா் அலுவலகத்தில் 001சி படிவம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளனா்.