வேலூர்

தேசியக் கொடிகளை ஆா்வமுடன் வாங்கிச் செல்லும் ஆசிரியா்கள்!

DIN

சுதந்திர தினத்தையொட்டி, பிரதமா் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலைத் தொடா்ந்து ஆகஸ்ட் 13 முதல் 15-ஆம் தேதி வரை வீடுகளில் ஏற்றுவதற்காக தேசியக் கொடிகளை பள்ளி ஆசிரியா்கள் ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனா்.

நாட்டின் 75-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 13 முதல் 15-ஆம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்து வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்களில் தேசியக் கொடியேற்ற பொதுமக்களுக்கு பிரதமா் நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதையடுத்து, அனைவருக்கும் தேசியக் கொடிகள் எளிதாகக் கிடைக்க அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் தேசியக் கொடிகள் விற்பனை புதன்கிழமை தொடங்கப்பட்டது.

வேலூா் கோட்டத்தில் உள்ள அஞ்சல் நிலையங்களில் 10,500 தேசியக் கொடிகள் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

இதனிடையே 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, ஆசிரியா்கள் தங்களது வீடுகளில் கோடியேற்றுவதற்காக ஆா்வமுடன் தேசியக் கொடிகளை வாங்கி வருகின்றனா்.

அதன்படி, காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசியக் கொடி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. காட்பாடி அஞ்சல் அலுவலகம் சாா்பில், தேசியக் கொடி விற்பனை தொடங்கியது.

இளஞ்சிறாா் செஞ்சிலுவை சங்க செயலரும், தொழிற்கல்வி ஆசிரியருமான செ.நா.ஜனாா்த்தனன் தேசியக் கொடிகளை வழங்க, அவற்றை பள்ளித் தலைமை ஆசிரியா் கோ.சரளா பெற்றுக் கொண்டாா்.

நிகழ்வில் உதவித் தலைமை ஆசிரியை க.திருமொழி, பள்ளி ஆய்வக உதவியாளா் டி.மணி, சௌமியா, ஆனந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளி இசை ஆசிரியை செலின் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT