வேலூர்

கள்ளக்காதலியை மிரட்ட தற்கொலைக்கு முயன்ற இசைக்கச்சேரி பாடகர் பலி

கள்ளக்காலியை மிரட்ட தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்ற இசைக் கச்சேரி பாடகர் பரிதாபமாக பலியானர்.

DIN

வேலூர்: கள்ளக்காலியை மிரட்ட தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்ற இசைக் கச்சேரி பாடகர் பரிதாபமாக பலியானர்.

வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த இடையகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜா(42). இவர் இசைக் கச்சேரி குழு வைத்து நடத்தி வந்துள்ளார். திருமணமாகி (மனைவி மேரி) 2 பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில். இவருடைய இசைக்குழுவில் பாடகராக உள்ள சித்ரா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. 

இந்நிலையில் அந்தப் பெண்ணுடன் பொன்னை பகுதியிலேயே வீட்டிற்கு தெரியாமல் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். இதனையடுத்து கள்ளத்தொடர்பில் இருந்த சித்ராவுக்கும், ராஜாவுக்கும் இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் சித்ராவை பயமுறுத்துவதற்காக, அறையில் படுத்திருந்த சித்ராவை மிரட்டிவிட்டு பொன்னை அடுத்த மாதாண்டகுப்பம் பகுதியில் இவர்கள் தங்கியுள்ள வீட்டின் ஒரு அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்வதற்காக முயன்றுள்ளார். 

இதனை செல்போன் மூலம் விடியோவும் எடுத்துள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக ராஜா சம்பவ இடத்திலேயே பலியானர். இதனைத் தாமதமாக பார்த்த சித்ரா அதிர்ச்சி அடைந்தார்.  

இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னை காவல் துறையினர் ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கள்ளக்காதலுக்காக மனைவி, பிள்ளைகளை விட்டு பாடகர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT