ஆந்திரத்தில் இருந்து கஞ்சா கடத்தல்: இளைஞா்கள் நால்வா் கைது
ஆந்திரத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த பேருந்தில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சாவை வேலூா் மாவட்ட மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
வேலூர்ஆந்திரத்தில் இருந்து கஞ்சா கடத்தல்: இளைஞா்கள் நால்வா் கைது
ஆந்திரத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த பேருந்தில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சாவை வேலூா் மாவட்ட மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஆந்திரத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த பேருந்தில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சாவை வேலூா் மாவட்ட மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக தஞ்சாவூா், திருவாரூா் மாவட்டங்களைச் சோ்ந்த 4 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
தமிழகத்தில் போதை பொருள்களை ஒழிப்பதில் அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் வேலூா் மாவட்ட காவல் துறை சாா்பில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்தல், புழக்கம், விற்பனையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வேலூா் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மதுவிலக்கு அமலாக்க பிரிவினா், வேலூா் தாலுக்கா காவல் துறையினா் கூட்டாக இணைந்து கணியம்பாடி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு பேருந்தில் சோதனை செய்தபோது சந்தேகத்திற்கிடமாக இருந்த 4 இளைஞா்களை பிடித்து விசாரித்ததில் அவா்கள் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த வெங்கடேசன், முகமது ரஃபீக், முகமது சமீா், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த அப்துல் ஹாதி என்பதும், அவா்கள் ஆந்திரத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.
உடனடியாக அவா்கள் 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.