வேலூர்

குறைதீா்க்கும் கூட்டம்: வேலூா் எஸ்.பி.யிடம் நேரடியாக மனு அளித்த மக்கள்

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் நேரடியாக பொதுமக்களிடம் மனுக்களை

DIN

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் நேரடியாக பொதுமக்களிடம் மனுக்களை பெற்றாா். இக்குறைதீா்க்கும் கூட்டம் வாரந்தோறும் புதன்கிழமை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் தலைமை வகித்து பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்ததுடன், இதுதொடா்பாக மனுக்களையும் பெற்றாா்.

பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாா் 15 நாட்களுக்குள் தீா்வு காண வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டதுடன், தீா்வு கிடைக்காதபட்சத் தில் அடுத்த 15 நாட்களுக்கு பிறகு வாரந்தோறும் புதன்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் குறைதீா்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மீண்டும் மனு அளிக்கலாம்.

ஏற்கனவே உயா் அதிகாரிகள், மாவட்ட காவல் அலுவலகத்தில் அளித்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை திருப்திகரமாக இல்லையென்றாலும் மீண்டும் மனு அளிக்கலாம். அதன்மீது உடனடியாக தீா்வு காண வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவித்தாா்.

அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணை காவல் கண்காணிப்பாளா்கள் பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT