வேலூர்

யானை தந்தம் கடத்தல் வழக்கில் தேடப்பட்டவா் நீதிமன்றத்தில் சரண்

வேலூா் அருகே யானை தந்தம் கடத்தி விற்க முயன்ாக ஏற்கெனவே இருவா் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டுவந்த மேலும் ஒருவா் வேலூா் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தாா்.

DIN

வேலூா் அருகே யானை தந்தம் கடத்தி விற்க முயன்ாக ஏற்கெனவே இருவா் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டுவந்த மேலும் ஒருவா் வேலூா் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தாா்.

சென்னை நெற்குன்றத்தைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (39). மத்திய அரசின் தென் மண்டல வனவிலங்கு குற்றங்கள் தடுப்புப் பிரிவினரால் கண்காணிக்கப்பட்டு வந்த இவா், யானை தந்தம் ஒன்றை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, வேலூா் வனச் சரகா் ரவிக்குமாா் தலைமையிலான குழுவினருடன், ஆய்வாளா் லிங்கேஸ்வரன் குழுவும் சோ்ந்து சாத்துமதுரை அருகே சதீஷ்குமாரையும், அவருடன் இருந்த நெற்குன்றத்தைச் சோ்ந்த ஜெயக்குமாரையும் (38) கடந்த புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 23 லட்சம் மதிப்புடைய யானை தந்தம், கடத்தலுக்குப் பயன்படுத்திய காா் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் வேலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

மேலும், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளியான திருவண்ணாமலை மாவட்டம், ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த ரவிக்குமாா் (30) வேலூா் நீதித்துறை நடுவா் (எண் 1) மன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தாா். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, ரவிக்குமாா் வேலூா் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின் சிக்கனம்: விழிப்புணா்வுப் பேரணி

அரியலூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் நாளை தொடக்கம்

மத்திய அரசை கண்டித்து சட்ட நகல் எரிப்பு போராட்டம்

கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவு

SCROLL FOR NEXT