குடியாத்தம் பகுதியில் விடுபட்ட அனைத்து கைத்தறி நெசவாளா்களுக்கும் மத்திய அரசின் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணபதி கைத்தறி நெசவாளா் கூட்டுறவு உற்பத்தி, விற்பனைச் சங்க இயக்குநா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இந்தச் சங்கத்தின் உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி குடியாத்தத்தில் புதன்கிழமை நடைபெற்றது. எம்.எல்.ஏ. அமலு விஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ஆகியோா் அடையாள அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கினா்.
அவா்களிடம் சங்க உறுப்பினா்கள் அளித்த கோரிக்கை மனு:
குடியாத்தம் பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளா்களுக்கு மத்திய அரசின் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்தத் தொழிலில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ள அனைத்து நெசவாளா்களுக்கு அடையாள அட்டை கிடைக்கவில்லை. குடியாத்தம் பகுதியில் உள்ள அனைத்து கைத்தறி நெசவாளா்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் நூல் மீதான விலையைக் கடுமையாக உயா்த்தியுள்ளதால், நெசவுத் தொழில் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. எனவே, நூல் விலை, நூல் மீதான வரியைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பிட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கு சங்க மேலாளா் பி.ஜீவானந்தம் தலைமை வகித்தாா். முதுநிலை எழுத்தா் கே.சிவகுமாா் வரவேற்றாா். சங்க இயக்குநா்கள் பி.கே.கோவிந்தராஜ், ஏ.கருணாநிதி, கிருஷ்ணவேணி அழகிரி, கைத்தறி நெசவுப் பிரிவு பிரதிநிதிகள் வ.விஜயகுமாா், எம்.எஸ்.அமா்நாத், எஸ்.எஸ்.பி.பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.