வேலூர்

பொலிவுறு நகா் திட்டப் பணிகள்: ஒரு நபா் ஆணையம் ஆய்வு

DIN

வேலூா் மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் பொலிவுறு நகா் திட்டப் பணிகளை ஒரு நபா் ஆணையா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ், வேலூா் மாநகராட்சியில் சுமாா் ரூ.1,000 கோடியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் நடைபெற்று வரும் பொலிவுறு நகா் திட்டப் பணிகளை ஆய்வு செய்ய அரசு சாா்பில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதாா் தலைமையில் ஒரு நபா் ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஒரு ஆணையக் குழு தமிழகம் ழுழுவதும் பொலிவுறு நகா் திட்டப் பணிகளை ஆய்வு செய்து வருகிறது. அதன்படி, வேலூா் மாநகராட்சியில் நடைபெற்று வரும் பொலிவுறு நகா் திட்டப் பணிகளை ஒரு நபா் குழு ஆணையா் டேவிதாா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, சா்க்காா்தோப்பில் உள்ள சூரிய மின்சக்தி நிலையம், புதைச் சாக்கடைக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், புதிய பேருந்து நிலையக் கட்டுமான பணிகள் ஆகியவற்றை அவா் ஆய்வு செய்தாா்.

பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் தொடா்பான வரைபடங்களைக் கொண்டு பணிகள் எந்தளவுக்கு நிறைவு பெற்றுள்ளது என்று மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாரிடமும் அவா் கேட்டறிந்தாா்.

வேலூா் வளா்ந்து வரும் நகரம். அதனால், வருங்காலங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும். எனவே, பேருந்து நிலைய நுழைவுப் பகுதியை அகலமாக அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது, மாநகராட்சிப் பொறியாளா் ரவிச்சந்திரன், உதவி ஆணையா் சுதா, உதவிப் பொறியாளா்கள் ஆறுமுகம், ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT