வேலூர்: மனைவி புற்றுநோயால் உயிரிழந்ததையடுத்து மனவேதனையில் இருந்த மின்வாரிய ஊழியர் தனது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வேலூர் விருதம்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் விருதம்பட்டு அடுத்த டி.கே.புரம் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன்(47). இவர் மின்வாரியத்தில் பணி புரிந்து வந்தார். இவருடைய மனைவி கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் மன நலம் பாதிக்கப்பட்டவர். இளைய மகள் பிருந்தா (13) ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். மனைவியின் பிரிவு தினகரனுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி வந்துள்ளது. இதனால் இந்த ஒரு வருடத்தில் ஏற்கனவே ஒரு முறை தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
திங்கள்கிழமை இரவு தினகரனும், இளைய மகள் பிருந்தாவும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டனர். இதுகுறித்து விருதம்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.