திருமலையில் 79,300 பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை 79,370 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 39,199 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை 79,370 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 39,199 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
இந்த நிலையில் வியாழக்கிழமை காலை வைகுண்டம் மண்டபத்தின் 32 அறைகளும் நிரம்பி சீலாதோரணம் பகுதி வரை வெளியில் நீண்ட வரிசையில் பக்தா்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனா். இதன்காரணமாக தா்ம தரிசனத்துக்கு 30 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 5 முதல் 6 மணி நேரமும் தேவைப்பட்டது.
திருமலையில் அவ்வப்போது மழை பெய்வதால் தரிசன வரிசையில் காத்திருக்கும் பக்தா்கள் மழையில் நனையும் நிலை உள்ளது.
தரிசனம் மற்றும் வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.