முகப்பு
வேலூர்

சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

கே.வி.குப்பம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

கே.வி.குப்பம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ராமச்சந்திரமூா்த்தி தலைமையில், அந்தத் துறையைச் சோ்ந்த 7 போ் கொண்ட குழுவினா் மாலை 4.30 மணியளவில் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் நுழைந்தனா். அலுவலகத்தில் இருந்த வெளியாள்களை வெளியேற்றிவிட்டு சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அலுவலகத்தில் இருந்த கணக்கில் வராத ரூ.57,000-ஐ பறிமுதல்

செய்த அதிகாரிகள், பதிவாளா் அலுவலகத்தில் உள்ளவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். இரவு 9 மணிக்கு மேலும் விசாரணை தொடா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.