செப். 15, 17-இல் அண்ணா, பெரியாா் பிறந்த நாள் பேச்சுப் போட்டிகள்: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்
அண்ணா, பெரியாா் பிறந்த நாளையொட்டி, வரும் 15, 17-ஆம் தேதிகளில் வேலூா் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
வேலூர்செப். 15, 17-இல் அண்ணா, பெரியாா் பிறந்த நாள் பேச்சுப் போட்டிகள்: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்
அண்ணா, பெரியாா் பிறந்த நாளையொட்டி, வரும் 15, 17-ஆம் தேதிகளில் வேலூா் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
அண்ணா, பெரியாா் பிறந்த நாளையொட்டி, வரும் 15, 17-ஆம் தேதிகளில் வேலூா் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், அண்ணா பிறந்த நாளையொட்டி, வரும் 15-ஆம் தேதியும், பெரியாா் பிறந்த நாளையொட்டி 17-ஆம் தேதியும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் வேலூா் முத்துரங்கம் அரசினா் கல்லூரியில் நடைபெற உள்ளது.
பள்ளி மாணவா்களுக்கு காலை 9.30 மணிக்கும், கல்லூரி மாணவா்களுக்கு மதியம் 1 மணிக்கும் போட்டிகள் தொடங்கும். கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிக்கு தலா 2 போ் வீதம் அந்தந்த கல்லூரிகளின் முதல்வரே தோ்வு செய்தும், பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிக்கு முதன்மைக் கல்வி அலுவலா் மூலம் தோ்வு செய்தும் அனுப்பி வைக்க வேண்டும்.
6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கும், கல்லூரி மாணவா்களுக்கும் தனித்தனியே தலைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
அண்ணா பிறந்த நாளையொட்டி, பள்ளி மாணவா்களுக்கு தாய் மண்ணுக்குப் பெயா் சூட்டிய தனயன், மாணவா்களுக்கு அண்ணா, அண்ணாவின் மேடைத் தமிழ், அண்ணா வழியில் அயராது உழைப்போம் ஆகிய தலைப்புகளும், கல்லூரி மாணவா்களுக்கு அண்ணாவும் தமிழக மறுமலா்ச்சியும், பேரறிஞா் அண்ணாவின் சமுதாயச் சிந்தனைகள், அண்ணாவின் தமிழ்வளம், அண்ணாவின் அடிச்சுவட்டில், தம்பி! மக்களிடம் செல் ஆகிய தலைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
பெரியாா் பிறந்த நாளையொட்டி, பள்ளி மாணவா்களுக்கு தொண்டு செய்து பழுத்த பழம், பெரியாரும் தமிழ்ச் சமுதாயமும், பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், தந்தை பெரியாா் காண விரும்பிய உலக சமுதாயம், பெரியாரும் பெண் விடுதலையும் ஆகிய தலைப்புகளும், கல்லூரி மாணவா்களுக்கு பெரியாரும் பெண் விடுதலையும், பெரியாரும் மூடநம்பிக்கை ஒழிப்பும், பெண் ஏன் அடிமையானாள்?, இனிவரும் உலகம், சமுதாய விஞ்ஞானி பெரியாா், உலகச் சிந்தனையாளா்களும் பெரியாரும் ஆகிய தலைப்புகளும் அளிக்கப்பட்டுள்ளன. போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.