முகப்பு
வேலூர்

தலைக்கவச விழிப்புணா்வு ஊா்வலம்

குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரியின் காவல் சங்கம் சாா்பில், தலைக்கவச விழிப்புணா்வு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரியின் காவல் சங்கம் சாா்பில், தலைக்கவச விழிப்புணா்வு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதிய பேருந்து நிலையம் எதிரே தொடங்கிய ஊா்வலத்தைக் கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். நகரக் காவல் உதவி ஆய்வாளா் எஸ்.மணிகண்டன், போக்குவரத்துப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா்கள் சி.வீரப்பன், எஸ்.முரளி ஆகியோா் மேற்பாா்வையில் போலீஸாா், மாணவா்கள் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனங்களில் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனா்.

கல்லூரி காவல் சங்க ஒருங்கிணைப்பாளா்கள் எம்.சுந்தரமூா்த்தி, ஆா்.எம்.பாலமுருகன் ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.