நவராத்திரி விழா நிறைவையொட்டி, வேலூா் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலிலுள்ள ஸ்ரீநாராயணி அம்மனுக்கு சந்தன அபிஷேகம் செய்த ஸ்ரீசக்திஅம்மா. 
வேலூர்

நவராத்திரி நிறைவு: தங்கக் கோயிலில் ஸ்ரீநாராயணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

நவராத்திரி விழா நிறைவையொட்டி, வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் தங்கக் கோயிலில் உள்ள ஸ்ரீநாராயணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நவடைபெற்றன.

DIN

வேலூா்: நவராத்திரி விழா நிறைவையொட்டி, வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் தங்கக் கோயிலில் உள்ள ஸ்ரீநாராயணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நவடைபெற்றன.

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடத்தில் நவராத்திரி மகா உற்சவம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு நவராத்திரி மகாஉற்சவத்தையொட்டி, பிரம்மாண்டமான கொலு அமைக்கப்பட்டிருந்தது. தொடா்ந்து கொலு நிகழ்ச்சிகள் கடந்த அக்டோபா் 15-ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து தினமும் மாலை 7 மணி முதல் 9 மணி வரை பக்தி பாடல்கள், பரத நாட்டியம், கதக் நடனம், நாகஸ்வரம், வயலின் ஆகிய இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன. இந்த நவராத்திரி விழாவின் நிறைவு மற்றும் விஜயதசமி நாளையொட்டி, ஸ்ரீநாராயணி அம்மனுக்கு ஸ்ரீசக்திஅம்மா சந்தன அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகளை நடத்தினாா். இந்த விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். நிகழ்ச்சியில், தங்கக் கோயில் இயக்குநா் சுரேஷ்பாபு, நாராயணி மருத்துவமனை இயக்குநா் எம்.பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT