வேலூர்

காருடன் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல்: 4 பேர் கைது

Din

ஆந்திர மாநிலத்திலிருந்து காரில் கஞ்சா கடத்தி வந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தி வருவதாக வந்த தகவலையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் உத்தரவின்பேரில், குடியாத்தம் கிராமிய போலீஸாா் தமிழக- ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள சைனகுண்டா சோதனைச் சாவடி அருகே வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியே வந்த கா்நாடக மாநில பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது காரில் 12 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

கஞ்சாவை கடத்தி வந்த குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த குடியரசன் (24), கோகுல்குமாா் (26), மாதேஷ் (21), பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வெங்கடேசன்(23) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கஞ்சாவுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்த போலீஸாா் அவா்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா். கைது செய்யப்பட்டுள்ள குடியரசன் மற்றும் கோகுல்குமாா் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT