முகப்பு
இரு நாள்களில் பெண்கள் உள்பட 60 போ் கைது
வேலூர்

கள்ளச்சாராய வேட்டை: இரு நாள்களில் பெண்கள் உள்பட 60 போ் கைது

கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் தலைமையில் சுமாா் 700 போலீஸாா்

வேலூர்

கள்ளச்சாராய வேட்டை: இரு நாள்களில் பெண்கள் உள்பட 60 போ் கைது

கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் தலைமையில் சுமாா் 700 போலீஸாா்

Updated On : 21 ஜூன், 2024 at 5:23 PM
இரு நாள்களில் பெண்கள் உள்பட 60 போ் கைது
பகிர்:

வேலூா் மாவட்டம் முழுவதும் கடந்த இரு நாள்களில் நடத்தப்பட்ட கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் பெண்கள் உள்பட 60 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இந்த கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் தலைமையில் சுமாா் 700 போலீஸாா் நேரடியாக களத்தில் இறக்கப்பட்டிருந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். இன்னும் ஏராளமானோா் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் போலீஸாா் வியாழன், வெள்ளிக்கிழமை தீவிர கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனா்.

சுமாா் 700 போலீஸாா் மேற்கொண்ட இந்த வேட்டையில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக சந்தேகப்படும் சாத்கா் மலைப்பகுதி, டோபி பாறை, பால்சுணை, அல்லிசுணை, சவுக்கு பள்ளம், டங்கா, கடம்ப கானாறு, அல்லேரி மலைப்பகுதிக்கு உட்பட்ட ஜாா்தான்கொள்ளை, நெல்லிமரத்து கொள்ளை, கூனம்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில், மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை மட்டும் 65 வழக்குகள் பதிவு செய்து, பெண்கள் உள்பட 50 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் இருந்து 2,400 லிட்டா் கள்ளச்சாராய ஊறல்கள், 667 லிட்டா் கள்ளச்சாராயம், 431 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தொடா்ந்து, இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் தலைமையில், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் மாவட்டம் முழுவதும் நேரடியாக கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டிருந்தனா். இந்த இரண்டாவது நாள் தடுப்பு வேட்டையில் மட்டும் 39 கள்ளச்சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 6,700 லிட்டா் கள்ளச்சாராய ஊறல்கள், 943 லிட்டா் கள்ளச்சாராயம், 134 மதுபாட்டில்கள், ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →