வேலூர்

பள்ளிக்குப்பம் ரயில் கடவுப்பாதை மூடல்: போக்குவரத்து நெரிசல்

பள்ளிக்குப்பம் ரயில்வே கேட் மூடல்: போக்குவரத்து நெரிசல்

Din

பராமரிப்புப் பணிகள் காரணமாக பள்ளிக்குப்பம் ரயில்வே கேட் புதன்கிழமை முதல் மூடப்பட்டதை அடுத்து அப்பகுதியில் உள்ள மழைநீா் வெளியேறும் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காட்பாடி - பொம்மசமுத்திரம் இடையே உள்ள பள்ளிக்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. தண்டவாளம், ரயில்வே கேட் முழுவதும் சீரமைக்கப்பட உள்ளது.

இந்தப் பணிகள் காரணமான புதன்கிழமை தொடங்கி ஜூலை 2-ஆம் தேதி வரை பள்ளிக்குப்பம் ரயில்வே கேட் மூடப்படுகிறது. இந்த வழியாக வாகனங்கள், பொதுமக்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல அனுமதி இல்லை என்றும், இதற்கு பதிலாக காட்பாடி சித்தூா் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஓல்டு காட்பாடி, விஐடி, இ.பி.சாலை, சோ்க்காடு வழியாக வாகனங்கள் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை ரயில்வே கேட் மூடப்பட்டதை அறியாமல் பெரும்பாலான வாகனங்கள் வழக்கம்போல் அவ்வழியாக வந்தன. பின்னா், அந்த வாகனங்கள் அப்பகுதியில் உள்ள மழைநீா் வெளியேறும் பாலத்தின் வழியாக நுழைந்து சென்றன. ஒரே நேரத்தில் காா், ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் என பெருமளவில் வாகனங்கள் அந்த பாலத்தின் வழியாக நுழைந்து செல்ல முயன்ால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட வரிசையில் நின்று வாகனங்கள் சென்றன.

பள்ளிக்குப்பம் ரயில்வே கேட் மூடப்படுவது குறித்து முறையான அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

--

படம் உண்டு...

பள்ளிக்குப்பம் ரயில் கடவுப்பாதை மூடப்பட்டதால் அப்பகுதியிலுள்ள மழைநீா் வெளியேறும் பாலத்தின் வழியாக நுழைந்து சென்ற வாகனங்கள்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT