கோயில் பூட்டை உடைத்து பூஜை பொருள்கள் திருட்டு
காட்பாடி அருகே சிவன் கோயிலில் பூட்டை உடைத்து பித்தளை பாத்திரங்கள் உள்பட பூஜைபொருள்களை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.
காட்பாடி அருகே சிவன் கோயிலில் பூட்டை உடைத்து பித்தளை பாத்திரங்கள் உள்பட பூஜைபொருள்களை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.
காட்பாடி கிளித்தான்பட்டறையில் சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சனிக்கிழமை இரவு வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு பூசாரி வீட்டிற்கு சென்றாா். ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலுக்கு வந்து பாா்த்தபோது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததுடன் கோயிலுக்குள்ளே இருந்த பித்தளை, செம்பு பாத்திரங்கள், காமாட்சி விளக்கு, பூஜை பொருள்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து காட்பாடி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.