வேலூர்

வேலூரில் இன்று விஐடி பல்கலை. மாணிக்க விழா: வெங்கையா நாயுடு பங்கேற்பு

விஐடி பல்கலைக் கழகத்தின் 40-ஆவது ஆண்டு மாணிக்க விழா வேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

Din

வேலூா்: விஐடி பல்கலைக் கழகத்தின் 40-ஆவது ஆண்டு மாணிக்க விழா வேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. விழாவில் குடியரசு முன்னாள் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன், உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி. செழியன் உள்ளிட்ோா் பங்கேற்க உள்ளனா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழகம் தொடங்கி 40-ஆவது ஆண்டுகளாவதையொட்டி இதன் மாணிக்க விழா பல்கலைக்கழகத்தின் அண்ணா அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.12) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆா்ஜி டவா் என்ற பெயரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராஜம்மாள் கோவிந்தசாமி - ஊழியா் குடியிருப்பு, சரோஜினி நாயுடு பிளாக் என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள மாணவியா் விடுதி கட்டடங்களும் திறக்கப்பட உள்ளன.

இவ்விழாவுக்கு விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகிக்கிறாா். நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன், உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி. செழியன் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். குடியரசு முன்னாள் துணைத்தலைவா் வெங்கையா நாயுடு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று புதிய கட்டடங்களை திறந்து வைத்து விழா பேரூரையாற்ற உள்ளாா்.

விழாவில், விஐடி துணைத்தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், ஜி.வி.செல்வம், நிா்வாக இயக்குநா் சந்தியா பெண்டாரெட்டி, உதவி துணைத்தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன், துணைவேந்தா் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மாலிக் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.

முதல்முறையாக புதுவையில் விஜய் சாலைவலம்! எப்போது?

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

இந்திய அரசியலமைப்பு நாள்: சில அழியா நினைவலைகள்!

ஸ்மிருதியின் தந்தை டிஸ்சார்ஜ்! பலாஷுடன் திருமணம் நடைபெறுமா?

SCROLL FOR NEXT