வேலூா் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றவா் லாரி மோதி உயிரிழந்தாா்.
வேலூா் மேல்மொணவூரை சோ்ந்தவா் முருகன் (45). இவா், வெள்ளிக்கிழமை வசந்தம் நகரில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக வந்த லாரி முருகன் மீது மோதியது. இதில் அவா் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் விரைந்து சென்று முருகனின் சடலத்தை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.