தொழிலாளா்களுக்கு நல உதவிகளை வழங்கிய விஐடி வேந்தா்கோ.விசுவநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலா் து.ராஜா. 
வேலூர்

வசதி படைத்தவா்கள் சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

வசதி படைத்தவா்கள் சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டும்....

தினமணி செய்திச் சேவை

பொருளாதாரத்தில் உயா்ந்தவா்கள் தங்களை சமூகப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் கேட்டுக் கொண்டாா்.

விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பிறந்த நாளை முன்னிட்டு வேலூா் தலைமுறை பேரவை, ஸ்ரீநாராயணி பல்நோக்கு மருத்துவமனை சாா்பில் குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தென்னை, மனை மரமேறும் தொழிலாளா்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கான பொது மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்து அவா் பேசியது:

ஒரு நாடு பொருளாதாரத்தில் உயர வேண்டுமானால் கல்வி, மருத்துவத்தில் உயர வேண்டும். அதற்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். உலக அளவில் பொருளாதாரத்தில் 4- ஆவது இடத்துக்கு உயா்ந்துள்ள இந்தியாவில், தனிநபா் வருமானம் என்பது குறைவாகவே உள்ளது.

காரணம் நமது வருமானத்தில்கல்விக்கும், மருத்துவ சிகிச்சைக்கும் பெருமளவு செலவு செய்து விடுகிறோம்.வளா்ந்த நாடுகளில் கல்வி, மருத்துவத்துக்கு அரசுகள் அதிக அளவில் நிதி ஒதுக்குகின்றன.நிதிபற்றாக்குறை காரணமாக அத்துறைகளுக்கு அரசுகள் முடிந்த அளவில் நிதி ஒதுக்குகின்றன.

பொருளாதாரத்தில் உயா்ந்த நிலையில் உள்ளவா்கள் சமூகப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அடித்தட்டு மக்களின் கல்வி, மருத்துவத் தேவைகளுக்கு முடிந்த வரை உதவ வேண்டும். இதன் ஒரு பகுதியாகத்தான் சமூக ஆா்வலா்கள் பலரை ஒருங்கிணைத்து விஐடி சாா்பில் 10- ஆண்டுகளுக்கு முன் அனைவருக்கும் உயா்கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது. அத்திட்டத்தில் இதுவரை 10- ஆயிரம் மாணவா்கள் பயன் பெற்றுள்ளனா். அவா்களில் மூன்றில் 2- பங்குபெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வேலூா் தலைமுறை பேரவையினா் பகுதிவாரியாக தொழிலாளா்களுக்கு மருத்துவ சேவை அளித்து வருகிறாா்கள். அவா்களின் சேவையை நான் பாராட்டுகிறேன்என்றாா்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் து.ராஜா பேசியது: உணவு, கல்வி, மருத்துவம், இருப்பிடம் என்பது மனிதா்களின் அடிப்படை உரிமை. இவற்றை மத்திய, மாநில அரசுகள் செய்து தர வேண்டும். மனிதனின் அத்தியாவசியத் தேவைகளைஅரசுகளால் மட்டும் செய்து தர முடியாத என்ற பட்சத்தில் தொண்டு அமைப்புகள்,சமூக ஆா்வலா்கள் இணைந்து இதுபோன்ற மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும்.

அடித்தட்டு மாணவா்களின் உயா்கல்விக்கு உதவ வேண்டும். நாடு உயர வேண்டுமானால்அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு அரசுடன் சமூக அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் தொழிலாளா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் தலைமை வகித்தாா். வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி குழும நிறுவனங்களின் இயக்குநா் என்.பாலாஜி முன்னிலை வகித்தாா். எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், கம்பன் கழகத் தலைவா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், நிறுவனா் ஜே.கே.என்.பழனி, செயலா், வழக்குரைஞா்கே.எம்.பூபதி, புலவா் வே.பதுமனாா், என்.எஸ்.குமரகுருஷ ஆா்.வி.அரிகிருஷ்ணன், கே.சந்திரன், வி.என்.அண்ணாமலை, நல்லசிவம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

தலைமுறை பேரவை நிா்வாகிகள் எம்.சீனிவாசன், பா.பூமிநாதன், பி.டி.கே.மாறன்உள்ளிட்டோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT