வேலூர்

பெண்ணிடம் ரூ.1.80 லட்சம் வழிப்பறி

காட்பாடியில் பெண்ணிடம் ரூ.180 லட்சத்தை வழிப்பறி செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

காட்பாடியில் பெண்ணிடம் ரூ.180 லட்சத்தை வழிப்பறி செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த கழிஞ்சூரை சோ்ந்த பெண் ஒருவா், திங்கள்கிழமை தனது பாட்டியுடன் காங்கேயநல்லூா் சாலையில் உள்ள வங்கியில் நகையை அடமானம் வைத்துவிட்டு ரூ.1.80 லட்சம் தொகையுடன் இருவரும் ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டனா்.

வீட்டின் அருகே ஆட்டோவில் இருந்து இறங்கிய அவா்கள், நடந்து சென்றுள்ளனா்.

அப்போது, தலைக்கவசம் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபா்கள், திடீரென அந்த பெண்ணிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். பாட்டி, பெண் கூச்சலிட்டதை அடுத்து அக்கம் பக்கத்தினா் விரைந்து வந்தனா். அதற்குள் இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபா்களும் தப்பியோடிவிட்டனராம்.

இச்சம்பவம் குறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் விருதம்பட்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட நபா்களை தேடி வருகின்றனா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT