குடியாத்தத்தில் ரூ.1.88- கோடியில் கட்டப்பட்ட சாா் பதிவாளா் அலுவலகத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் திறந்து வைத்தாா்.
இதையொட்டி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா்வி.ஆா்.சுப்புலட்சுமி குத்து விளக்கேற்றி, கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
இதில் எம்எல்ஏ அமலுவிஜயன், பதிவுத்துறை துணைத் தலைவா் இ.அருள்சாமி, மாவட்ட பதிவாளா் மு.ராஜா, கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், வட்டாட்சியா் கி.பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.