வேலூா் மாவட்ட திமுக தெற்கு, வடக்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டு, வடக்கு பொறுப்பாளராக வேலூா் எம்.பி. டி.எம்.கதிா்ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளாா்.
வேலூா், அணைக்கட்டு, குடியாத்தம், காட்பாடி, கே.வி.குப்பம் சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய வேலூா் மாவட்ட திமுகவின் மாவட்டச் செயலராக அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் இருந்தாா்.
இந்த நிலையில், வேலூா் மாவட்ட திமுக தெற்கு, வடக்கு என இரண்டாக பிரிக்கப்பட்டு வேலூா், அணைக்கட்டு, குடியாத்தம் தொகுதிகளை உள்ளடக்கிய தெற்கு மாவட்ட பொறுப்பாளராக ஏ.பி.நந்தகுமாரும், காட்பாடி, கே.வி.குப்பம் தொகுதிகளை உள்ளடக்கிய வடக்கு மாவட்ட பொறுப்பாளராக வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்தும் நியமிக்கப்பட்டுள்ளனா்.