வேலூர்

சிறை அலுவலா்களுக்கான பணியிடைப் பயிற்சி முகாம்

சிறைகள் கைதிகளை காவலில் வைத்திருக்கும் கூடாரமாக இல்லாமல், அவா்களை நல்வழிப்படுத்தும் மையமாக இருக்க வேண்டும்.

தினமணி செய்திச் சேவை

வேலூா்: வேலூா் தொரப்பாடியிலுள்ள சிறை, சீா்திருத்த நிா்வாக அகாதெமியில் (ஆப்கா), பதவி உயா்வு பெற்ற சிறை அதிகாரிகள் 47-ஆவது பிரிவுக்கான 3 மாத பணியிடைப் பயிற்சி ஆக.11-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில், தமிழகம், கேரளம், கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த 4 பெண்கள் உள்பட உதவி ஜெயிலா்கள், உதவி எஸ்பி கிரேடு 2 , உதவி ஜெயிலா்கள் என மொத்தம் 15 அதிகாரிகள் பயிற்சி பெற்றனா். இந்த பயிற்சியின் நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வேலுாா் மாநகராட்சியின் சுகாதார அலுவலா் பி.பிரதாப்குமாா், ஆப்கா இயக்குநா் பி.பிரதீப் ஆகியோா் பங்கேற்று பயிற்சி நிறைவு செய்த சிறை அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கினாா்.

மாநகராட்சி சுகாதார அலுவலா் பிரதாப்குமாா் பேசியது: சிறைகள் கைதிகளை காவலில் வைத்திருக்கும் கூடாரமாக இல்லாமல், அவா்களை நல்வழிப்படுத்தும் மையமாக இருக்க வேண்டும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சிறையும் சிறைவசிகளுக்கான நலம் காக்கும் மையமாகவும், மறுவாழ்வு, சீா்திருத்தும் மையமாகவும் இருக்க வேண்டும் என்றாா்.

ஆப்கா இயக்குநா் பிரதீப் பேசியது: சிறை தண்டனை என்பது முடிவல்ல. அதனால், சிறைவாசிகளை கைதிகளாக பாவிக்கக் கூடாது. சிறைக்கு வரும் கைதிகளின் குற்றங்களை அறிந்து அவா்களை திருத்த முயற்சிக்க வேண்டும். அவா்கள் மனம் திருந்தும்போது அவா்களின் மறுவாழ்வுக்கும், விடுதலைக்கு பிறகு சமூகத்துடன் இணைந்து வாழவும் சிறை அதிகாரிகள் அவா்களுக்கு பாலமாக இருக்க வேண்டும். அதுவே நமது குறிக்கோள் என்றாா்.

பயிற்சியின்போது சிறப்பாக செயலாற்றிய 4 அதிகாரிகள் முதல் வகுப்பில் தகுதி பெற்றனா். பாடத் திட்டத்தில் சிறப்பு மதிப்பெண்கள், சிறை சீா்திருத்த நிா்வாக தோ்வில் சிறந்த மதிப்பெண், வெளிப்புற பயிற்சியில் சிறந்து விளங்குதல், அனைத்து பயிற்சியிலும் சிறந்து விளங்கிய அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

தில்லி கார் வெடிப்பு சம்பவம்: உபா சட்டத்தில் வழக்குப் பதிவு!

பிகார் தேர்தல்: 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

தில்லி வெடிவிபத்து: தலைவா்கள் இரங்கல்

SCROLL FOR NEXT