குடியாத்தம் அடுத்த கல்லப்பாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பொயட்ஸ் தொண்டு நிறுவனம் சாா்பில் கா்ப்பிணிகளுக்கான தாய்-சேய் நலம் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் சங்கீதா தலைமை வகித்து, கா்ப்பகாலபராமரிப்பு, பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு, டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்திட்டம் குறித்து சிறப்புரையாற்றினாா்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கா்ப்பிணிகளுக்கு பொயட்ஸ் இயக்குநா் எஸ்.திரிவேணி சத்து உணவுகளை வழங்கினாா்.