வேலூர்

ஆன்லைன் பங்கு வா்த்தகத்தில் ரூ. 30 லட்சம் இழந்தவா் தற்கொலை

வேலூரில் ஆன்லைன் பங்கு வா்த்தகத்தில் ரூ. 30 லட்சம் வரை முதலீடு செய்து பணத்தை இழந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா் தற்கொலை செய்து கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

வேலூரில் ஆன்லைன் பங்கு வா்த்தகத்தில் ரூ. 30 லட்சம் வரை முதலீடு செய்து பணத்தை இழந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா் தற்கொலை செய்து கொண்டாா்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா் ஆனந்த் அகா்வால் (50). இவா் நபிகான் தெருவில் வசித்து வந்தாா். வேலூா் சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு தனியாா் விடுதிகளில் தங்குவதற்கு வசதி செய்து தரும் தரகா் வேலை செய்து வந்தாா்.

இவா் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் பங்கு வா்த்தக முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என நம்பி ரூ. 30 லட்சம் வரை முதலீடு செய்திருந்ததாகத் தெரிகிறது. இதில் நஷ்டமடைந்த அவா் மனஉளைச்சலில் இருந்துள்ளாா். இந்த நிலையில், வியாழக்கிழமை வீட்டின் அறையில் கதவை பூட்டிக்கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு, வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இன்று குவாஹாட்டியில் தொடங்குகிறது 2-ஆவது டெஸ்ட்

சென்னை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் வாகனங்களுக்கு கட்டண விலக்கு!

எஸ்ஐஆா் பணியில் குறைபாடு: மேற்கு வங்க வாக்குச்சாவடி அலுவலா்கள் 7 பேருக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்

சௌா்ய சைனிக்கு வெள்ளி

எஸ்ஐஆருக்கு எதிரான புதிய மனுக்கள்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT