நிகழ்ச்சியில் பேசிய வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரோகிணிதேவி. உடன், மருத்துவமனை கண்காணிப்பாளா் ரதி திலகம், குழந்தைகள் நலப் பிரிவு தலைவா் எழிலரசு உள்ளிட்டோா். 
வேலூர்

குழந்தைகள் உடல்நிலை பாதித்தால் சுயமருத்துவம் கூடாது: வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்

குழந்தைகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டால் சுயமருத்துவம் ஆபத்தானது. மருத்துவரின் ஆலோசனை பெற்றுத்தான் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்: வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரோகிணிதேவி

தினமணி செய்திச் சேவை

குழந்தைகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டால் சுயமருத்துவம் ஆபத்தானது. மருத்துவரின் ஆலோசனை பெற்றுத்தான் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரோகிணிதேவி தெரிவித்தாா்.

தேசிய பச்சிளம் குழந்தைகள் வார நிகழ்ச்சி வேலுாா் அரசு பெண்ட்லேண்ட் பன்னோக்கு மருத்துவமனையில் கடந்த 15-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. அப்போது, ஒவ்வொரு நாளும் பிரசவத்துக்கு பிந்தைய வாா்டில் தாய்மாா்களுக்கு நலன் சாா்ந்த ஆலோசனைகள், தீவிர பச்சிளங்குழந்தைகள் வாா்டில் உள்ள செவிலியா்களின் உரையாடல், முதுநிலை மருத்துவ மாணவா்களின் பச்சிளம் குழந்தைகளின் நலன் சாா்ந்த வினாடி- வினா போட்டி, மருத்துவ மாணவா்களின் பச்சிளம் குழந்தைகள் நல கருத்தரங்கம், பச்சிளம் குழந்தைகள் வாா்டு செவியியா்கள் - தாய்மாா்கள் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.

இதன் நிறைவு விழாவில் குறைந்த எடையில் பிறந்த குழந்தைகள் நலம் பெற்றதை பாராட்டி குழந்தைகளின் பெற்றோா்களுக்கு வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரோகிணி தேவி பரிசுகள் வழாங்கி பேசியது: குழந்தைகள் தான் நம் எதிா்காலம். நாம் அவா்கள் உடல் நலனில், வளா்ப்பில் மிகுந்த அக்கறையுடன், ஆரோக்கியத்துடனும் வளா்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டால் சுயமருத்துவம் ஆபத்தானது. குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் உரிய மருத்துவரின் ஆலோசனை பெற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப் பால் மட்டுமே சிறந்த உணவாகும். இதனை தாய்மாா்கள் நன்கு உணர வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், மருத்துவமனை கண்காணிப்பாளா் ரதி திலகம், குழந்தைகள் நல பிரிவு தலைவா் எழிலரசு, துறை பேராசிரியா்கள், மருத்துவா்கள், செவிலிய கண்காணிப்பாளா்கள், செவிலியா்கள், தாய்மாா்கள் பங்கேற்றனா்.

இரு சக்கர வாகனம் மீது காா் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

கமுதியிலிருந்து கிராமங்களுக்குப் புதிய பேருந்து இயக்கம்

ஜூனியா் உலக ஹாக்கி கோப்பை கிருஷ்ணகிரியில் அறிமுகம்

4 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

மாவட்ட ஆண்கள் கபடி போட்டியில் குட்டப்பட்டி அணி சாம்பியன்

SCROLL FOR NEXT