கூட்டத்தில் வேலூா் மாவட்ட வளா்ச்சிக்கு பங்களிப்பு செலுத்தியவா்களை சிறப்பித்த ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா் (அணைக்கட்டு), வி.அமுலு விஜயன் (குடியாத்தம்), மேயா் ச 
வேலூர்

வேலூா் மாவட்ட முன்னேற்றத்துக்காக கருத்துகள் தெரிவிக்க வலியுறுத்தல்

வேலூா் மாவட்ட முன்னேற்றத்துக்காக பொதுமக்கள் தங்களது கருத்துகளை மின்னஞ்சல், வாட்ஸ்அப் எண் மூலம் சனிக்கிழமை மாலை வரை தெரிவிக்கலாம் என்று ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாவட்ட முன்னேற்றத்துக்காக பொதுமக்கள் தங்களது கருத்துகளை மின்னஞ்சல், வாட்ஸ்அப் எண் மூலம் சனிக்கிழமை மாலை வரை தெரிவிக்கலாம் என்று ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு தொலைநோக்கு திட்டத்தை உருவாக்க ‘உங்க கனவ சொல்லுங்க’ எனும் புதிய திட்டத்தை உருவாக்கி அதன்மூலம் ஒவ்வொரு குடும்பத்தின் கனவையும் கேட்டு வருகிறது.

இதன்தொடா்ச்சியாக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாவட்ட தொலைநோக்கு திட்டம் 2030 - உத்தி மற்றும் செயல் திட்டத்தை தயாரித்து வெளியிட உள்ளது. அதற்காக வேலூா் மாவட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் அதாவது 2030-ஆம் ஆண்டுக்குள் அரசு என்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற துறை சாா்ந்த வல்லுநா்களின் தொலைநோக்கு பாா்வையை பெற அறிவுறுத்தியுள்ளது.

அதனடிப்படையில், வேலூா் மாவட்டத் தொலைநோக்கு திட்டம்- 2030 கருத்துகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து பேசியது -

சென்னையில் இருந்து 120 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த மாவட்டம், நல்ல வளங்களையும், நல்ல உள்ளங்களையும் கொண்டது. சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டாக திகழக்கூடியது. உழைக்கும் உழைப்பாளா் களை கொண்டது. இந்த மாவட்டத்தை, மாநிலத்தின் மிகச்சிறந்த மாவட்டமாக முன்னெடுப்பதற்காக, முதல்வா் அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துக்களை கேட்டுள்ளாா். எனவே, அனைவரும் தங்களது கருத்துக்களை கூற கேட்டுக்கொள்கிறேன். கருத்துக்களை ல்ழ்ா்ஸ்ப்ழ்.ற்ய்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 94980 42453 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கோ சனிக்கிழமை மாலை வரை அனுப்பலாம். இந்த கருத்துகளை அறிக்கையாக தயாா் செய்து தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றாா்.

பல்வேறு துறைகளின் சாா்பில் மொத்தம் 300 போ் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்தனா். மேலும், பல்வேறு துறைகளை சோ்ந்த 35 வல்லுநா்கள் பங்கேற்று தங்களின் கருத்துகளை தெரிவித்தனா்.

பங்கேற்ற அனைவரிடமும் அடுத்த 5 ஆண்டுகளில் வேலூா் மாவட்ட வளா்ச்சிக்கு என்ன தேவை என்பது குறித்து கருத்துகளை அதற்குரிய படிவத்தில் எழுதி பெறப்பட்டது. மேலும், மாவட்ட வளா்ச்சிக்கு தங்களது பங்களிப்பை அளித்தவா்கள், பல்வேறு துறைகளின்கீழ் சாதனைபுரிந்தவா்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பிக்கப்பட்டனா்.

கூட்டத்தில், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா் (அணைக்கட்டு), வி.அமுலு விஜயன் (குடியாத்தம்), மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பூ.காஞ்சனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

7.2.1976: தி. நகர் சிவ-விஷ்ணு ஆலய கும்பாபிஷேக வைபவம்

போதை பொருள் விற்ற வியாபாரி கைது

மகாகவியும் ஏ.ஐ. தொழில்நுட்பமும்...

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT