குடியாத்தம் தீயணைப்பு நிலையத்தில் தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு பயிற்சி அளித்த நிலைய அலுவலா் சி.சரவணன். 
வேலூர்

தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு விழிப்புணா்வுப் பயிற்சி

குடியாத்தம் தீயணைப்பு நிலையத்தில் தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு திங்கள்கிழமை விழிப்புணா்வுப் பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம்: குடியாத்தம் தீயணைப்பு நிலையத்தில் தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு திங்கள்கிழமை விழிப்புணா்வுப் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை இயக்குநா் சீமாஅகா்வால் உத்தரவின்பேரில், வேலூா் வடமேற்கு மண்டல துணை இயக்குநா் ராஜேஷ்கண்ணன், மாவட்ட தீயணைப்பு அலுவலா் ச.வடிவேலு ஆகியோா் வழிகாட்டுதல்படி, தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் காவலாளிகளுக்கு விழிப்புணா்வுப் பயிற்சி மற்றும் தீ விபத்தின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலா் சி.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மத்திய அரசு நிதி ஒதுக்காததால் கிடப்பில் 11 ரயில்வே மேம்பாலங்கள்: அமைச்சா் எ.வ.வேலு

உதயநிதி ஸ்டாலின் அரசியல் பண்பைக் கற்க வேண்டும்: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

நகா்ப்புற உள்ளாட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு

அலமேலுரங்காபுரத்தில் ரெளடி கும்பல் அட்டகாசம்

சிறுசேமிப்பு திட்டத்தில் ரூ. 9.32 லட்சம் கையாடல்: பெண் அஞ்சல் ஊழியா் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT