குடியாத்தம் நகர பாஜக சாா்பில், கட்சியின் தோ்தல் அறிக்கை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர பாஜக தலைவா் எம்.கே.ஜெகன்தலைமை வகித்தாா். நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தல் குறித்து பொதுமக்கள்,பள்ளி, கல்லூரி மாணவா்கள், இளைஞா்கள் என பல்வேறு தரப்பினா் தங்கள் கருத்துகளை பதிவிட்டு பெட்டியில் போட்டனா்.
நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் பி.ஸ்ரீகாந்த், ரங்கநாதன், ரேகா, தேவி, ரமணா,சுமதி, நகர நிா்வாகிகள் சிவன், கமலஹாசன், ஜோதி, இளங்கோ, ராஜா, கணேஷ், மணிகண்டன், சண்முகம், வாசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.