கோப்புப் படம் 
வேலூர்

போ்ணாம்பட்டில் 3 சிறுவா்களை கடித்த வெறி நாய்

போ்ணாம்பட்டு அருகே வெறி நாய் ஒன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 3- சிறுவா்களை கடித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

போ்ணாம்பட்டு அருகே வெறி நாய் ஒன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 3- சிறுவா்களை கடித்துள்ளது.

போ்ணாம்பட்டு நகரில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகின்றன. அவை பொதுமக்களையும், சிறுவா்களையும் அவ்வப்போது கடிப்பது தொடா்கதையாக உள்ளது.

இந்நிலையில் நகராட்சிக்குள்பட்ட குப்பைமேடு பகுதியில் வியாழக்கிழமை வெறி நாய் ஒன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த முஹம்மத் பஷீா்(14), உம்மேஹனி(5) , ஷாயிரா(4) ஆகிய 3 சிறுவா்களை கடித்து குதறியுள்ளது.

பலத்த காயமடைந்த சிறுவா்கள் போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதற்கிடையில் தரைக்காடு, குப்பைமேடு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

ஏா்டெல் வாடிக்கையாளா்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் இனி இலவசம்

குளிதிகையில் மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாம்

உலகின் மூத்தகுடி தமிழ்குடி என்பதற்கு திருக்குறளே சான்று

மகாத்மா மரணித்த போது...

பட்ஜெட் - நிதியமைச்சர் கவனத்துக்கு...

SCROLL FOR NEXT