கோயம்புத்தூர்

சர்வதேச ஃபிடே ரேட்டிங் செஸ்: முன்னிலை வீரர்கள் எளிதில் வெற்றி

கோவை, ஆக.26: கோவையில் ஞாயிற்றுக்கிழமை துவங்கிய சர்வதேச செஸ் போட்டியில் முன்னிலை வீரர்கள் எளிதில் வெற்றி பெற்றனர்.  கோவை செஸ் மேட்ஸ் சார்பில் கணபதி பட்டிய கவுண்டர் செல்லம்மாள் திருமண மண்டபத்தில் ஃபிடே

ஆர். வேல்முருகன்

கோவை, ஆக.26: கோவையில் ஞாயிற்றுக்கிழமை துவங்கிய சர்வதேச செஸ் போட்டியில் முன்னிலை வீரர்கள் எளிதில் வெற்றி பெற்றனர்.

 கோவை செஸ் மேட்ஸ் சார்பில் கணபதி பட்டிய கவுண்டர் செல்லம்மாள் திருமண மண்டபத்தில் ஃபிடே ரேட்டிங் செஸ் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை துவங்கின. நாடு முழுவதும் இருந்து 245 வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். ஐசிஎஃப் வீரர் பி.பூபாலன், இப்போட்டியின் முதல் நிலை வீரராகக் களமிறங்கியுள்ளார். 2 சர்வதேச மாஸ்டர்கள் களத்தில் உள்ளனர்.

 ஞாயிற்றுக்கிழமை இரு சுற்று ஆட்டங்கள் நடைபெற்றதில் முன்னிலை வீரர்கள் எளிதில் வெற்றி பெற்றுள்ளனர். வரும் 30-ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.

 முன்னதாக, எழுத்தாளர் பாமரன், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையாளர் தங்கவேலு ஆகியோர் போட்டிகளைத் துவக்கி வைத்தனர். கோவை செஸ் மேட்ஸ் தலைவர் செந்தில் சின்னசாமி தலைமை வகித்தார். செயலர் மோகன்குமார் வரவேற்றார். கோவை மாவட்ட செஸ் சங்க செயலர் விஜயராகவன் வாழ்த்துரை வழங்கினார்.

 சர்வதேச மாஸ்டர்களான ஐசிஎஃப் வீரர் ராமநாதன் பாலசுப்பிரமணியன், தெற்கு ரயில்வே வீரர் டி.பி.சிங், 12 வயதுக்கு உள்பட்டவர்களில் அதிக ரேட்டிங் கொண்ட ஓ.என்.ஜி.சி. வீரர் அரவிந்த் சிதம்பரம், பி.எஸ்.என்.எல். வீரர் ராம் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பங்கேற்றுள்ளனர். போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை ரூ.1.20 லட்சம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

SCROLL FOR NEXT