முகப்பு
கோயம்புத்தூர்

மே தின கொண்டாட்டம்: மின்சாரம் தாக்கி தேமுதிக நிர்வாகிகள் இருவர் சாவு

திருப்பூர், மே. 2: திருப்பூரில் மே தினத்தை கொண்டாட கட்சி கொடி கம்பம் நட்டும்போது மின்சாரம் தாக்கியதால் தேமுதிக கிளை நிர்வாகிகள் இருவர் பரிதாபமாக இறந்தனர். திருப்பூர் ஆண்டிப்பாளையம் குளத்துப்புதூர் பகு

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:05 PM
பகிர்:

திருப்பூர், மே. 2: திருப்பூரில் மே தினத்தை கொண்டாட கட்சி கொடி கம்பம் நட்டும்போது மின்சாரம் தாக்கியதால் தேமுதிக கிளை நிர்வாகிகள் இருவர் பரிதாபமாக இறந்தனர்.

திருப்பூர் ஆண்டிப்பாளையம் குளத்துப்புதூர் பகுதியை சேர்ந்த பிரபு (29). இவர் அப்பகுதி தேமுதிக கிளைப் பொருளாளர். இதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (35). தேமுதிக கிளை நிர்வாகி. குளத்துப்புதூரில் மே தினம் கொண்டாடுவதற்காக திங்கள்கிழமை இரவு அங்கு கட்சி கொடிக்கம்பம் நட்டும் பணியில் பிரபு, பழனிச்சாமி ஈடுபட்டனர்.

கொடி கம்பத்தை தூக்கியபோது எதிர்பாராத விதமாக கால் தவறி இருவரும் அங்குள்ள சாக்கடையில் விழ நேரிட்டது. அப்போது கொடிக்கம்பம் மின்சார வயரில் உரசியதால் மின்சாரம் தாக்கியதில் இருவரும் தூக்கி விசப்பட்டு மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தனர். தேமுதிக நிர்வாகிகள் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →