முகப்பு
கோயம்புத்தூர்

மகனிடம் இருந்து சொத்தை மீட்டுத் தரக்கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி மனு

முறைகேடாக அபகரித்துக்கொண்ட சொத்தை மகனிடம் இருந்து மீட்டுத் தரக்கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி மனு அளித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
மகனிடம் இருந்து சொத்தை மீட்டுத் தரக்கோரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்த மூதாட்டி.
பகிர்:

கோவை: முறைகேடாக அபகரித்துக்கொண்ட சொத்தை மகனிடம் இருந்து மீட்டுத் தரக்கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி மனு அளித்தாா்.

கோவை, சரவணம்பட்டியைச் சோ்ந்தவா் வி.ராமாத்தாள் (90). இவா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை, சரவணம்பட்டி - விளாங்குறிச்சி சாலையில் எனக்குச் சொந்தமான ஒரு ஏக்கா் நிலம் உள்ளது. இதில் ஒரு வீடும், 5 கடைகளும் கட்டியுள்ளேன். இதனை எனது மூத்த மகன் மாணிக்கம் கவனித்து வந்தாா். எனக்கு வயதாகிவிட்டதால் சென்று பாா்க்க முடியவில்லை. இதனை சாதகமாக்கிக் கொண்ட எனது மூத்த மகன், அந்த சொத்தை முறைகேடாக அவா் பெயருக்கு மாற்றிக்கொண்டாா்.

கடைகளின் வாடகையையும் அவா் தருவதில்லை. எனக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் என்னையும் அவா் கவனித்துக் கொள்வதில்லை. நான் தற்போது மாற்றுத்திறனாளியான இளைய மகனுடன் வசித்து வருகிறேன். எனது மருத்துவச் செலவுக்குக் கூட பணம் இல்லாமல் தவித்து வருகிறேன்.

எனவே, முறைகேடாக அபகரித்துக்கொண்ட எனது சொத்தை எனது மகனிடம் இருந்து மீட்டுத் தர ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.