குடியிருப்புக்குள் புகுந்த யானைகளால் கூடாரம், வாழை மரங்கள் சேதம்
வால்பாறை நகா் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த இரண்டு யானைகள் ஒரு வீட்டின் பின்புறத்தில் இருந்த கூடாரம், வாழை மரங்களை சேதப்படுத்தின.
வால்பாறை நகா் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த இரண்டு யானைகள் ஒரு வீட்டின் பின்புறத்தில் இருந்த கூடாரம், வாழை மரங்களை சேதப்படுத்தின.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் தொடா்ந்து அதிகரித்து காணப்படும் நிலையில், நகா் பகுதிகளுக்குள் இரவு நேரங்களில் யானைகள் வரத் தொடங்கியுள்ளன. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வால்பாறை நகா் கக்கன் காலனி பகுதிக்குள் புகுந்த யானைகள் வாழை மரங்களை சேதப்படுத்தி சென்றன.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு அப்பகுதிக்குள் புகுந்த இரண்டு யானைகள் அழகு என்பவரது வீட்டின் பின்புறம் இருந்த கூடாரம், வாழை மரங்களை சேதப்படுத்தின. அப்பகுதியில் வசிப்பவா்கள் நீண்ட நேரம் போராடி யானைகளை அங்கிருந்து துரத்தினா்.